4 விரைவு ரயில்களில் தற்காலிக பெட்டிகள் சேர்ப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

4 விரைவு ரயில்களில் தற்காலிக பெட்டிகள் சேர்ப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Updated on
1 min read

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெங்களூர் நாகர்கோவில் பெங்களூர் விரைவு ரயில் களில் (17235/17236) வரும் 2-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது. காச்சிகுடா மதுரை காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில்களில் (17615/17616) வரும் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு தலா ஒரு ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

காச்சிகுடா மங்களூர் காச்சிகுடா வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில்களில் (17606/17605) வரும் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு தலா ஒரு ஏசி பெட்டி இணைக்கப்படவுள்ளது. ஐதராபாத் திருவனந்தபுரம் ஐதராபாத் சபரி விரைவு ரயில்களில் (17230/17229) வரும் 3-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரையில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in