தமிழகத்தில் நேர்மையான அரசாங்கம் அமைய வேண்டும்: முதல்முறை வாக்காளர்கள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த இளம்பெண்கள்.படம்: இரா.தினேஷ்குமார்.
திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த இளம்பெண்கள்.படம்: இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

தமிழகத்தில் நேர்மையான அரசாங்கம் அமைய வேண்டும் என முதல்முறை வாக்காளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 49,879 பேர் உள்ளனர். இவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர் களில் பெரும்பாலானவர்கள் வாக்களித் துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்லூரி மாணவிகள் பிரியா, பவித்ரா, சவுமியா, ரேணுகா மற்றும் விஜய லட்சுமி ஆகிய 5 பேர் தங்களது முதல் வாக்கை நேற்று பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, “மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அனைவருக்கும் சம உரிமை என்ற கொள்கையை கொண்டது. இந்நிலையில், நமது நாட்டின் முக்கிய மாநிலங் களில் ஒன்றான தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (நேற்று) நடைபெற்றுள்ளது. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக, எங்களது வாக்கை முதல்முறையாக பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை ஆள்பவர் களை தேர்வு செய்யும் உரிமையை பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் அமையப்போகும் புதிய அரசாங்கம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும். எனவே, உலக தரத்துக்கு இணையான கல்வியை அமைத்து கொடுக்க வேண்டும். வேலையற்ற இளை ஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், விளையாட்டுத் துறையில்கூடுதல் கவனம் செலுத்தி, கிராமப் புறங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் நேர்மையான அரசாங்கம் அமைந்து, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in