Last Updated : 06 Apr, 2021 02:54 PM

 

Published : 06 Apr 2021 02:54 PM
Last Updated : 06 Apr 2021 02:54 PM

தென்காசியில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.17% வாக்குப்பதிவு

தென்காசியில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.17% வாக்குப்பதிவாகியுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்களம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சங்கரன்கோவில் தொகுதியில் 15 பேர், வாசுதேவநல்லூர் தொகுதியில் 11 பேர், கடையநல்லூர் தொகுதியில் 21 பேர், தென்காசி தொகுதியில் 18 பேர், ஆலங்குளம் தொகுதியில் 10 பேர் என மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 1,884 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இவற்றில், பதற்றமான 143 வாக்குச்சாவடிகளில் தலா ஒரு நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு மையங்களில் 1,584 காவல்துறையினர், 360 துணை ராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல்படையினர், கர்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினரும் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் 1,016 வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 834 பேர், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுடன் 9,044 பணியாளர்கள், பொது சுகாதாரத்துறையின் மூலம் தன்னார்வ அமைப்புகளிலிருந்து 3,768 பேர் ஈடுபட்டனர்.

கரோனா பரவலை தடுக்க வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டன. வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் வழங்கப்பட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

காலை 9 மணி வரை சங்கரன்கோவில் தொகுதியில் 7.12 சதவீதம், வாசுதேவநல்லூர் தொகுதியில் 7.81 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 9.66 சதவீதம், தென்காசி தொகுதியில் 13.1 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 13.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

11 மணி நிலவரப்படி சங்கரன்கோவிலில் 28.09 சதவீதம், வாசுதேவநல்லூரில் 27.96 சதவீதம், கடையநல்லூரில் 20.49 சதவீதம், தென்காசியில் 30.31 சதவீதம், ஆலங்குளத்தில் 28.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மதிய்ம் 1 மணி நிலவரப்படி சங்கரன்கோவிலில் 42.37 சதவீதம், வாசுதேவநல்லூரில் 44.85 சதவீதம், கடையநல்லூரில் 39.74 சதவீதம், தென்காசியில் 45.55 சதவீதம், ஆலங்குளத்தில் 44.82 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x