

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், வேலை நாடுநர்களும் வேலைவாய்ப்புத் துறையின் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்புகளை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தொழில்முறை வழிகாட்டும் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.