1 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 39.61% வாக்குப்பதிவு; விருதுநகரில் 41.79%; நெல்லையில் 32.29%

1 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 39.61% வாக்குப்பதிவு; விருதுநகரில் 41.79%; நெல்லையில் 32.29%
Updated on
1 min read

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சத்யபிரதா சாஹு கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரிதாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இல்லை. இவிஎம் பிரச்சினை எங்கும் இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது. வாக்காளர்கள் வாக்கு இல்லை என்று கூறுவது குறித்து பலமுறை கூறியுள்ளோம். வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது உங்கள் பெயர் உள்ளதா என்று சோதித்து இல்லையென்றால் உடனடியாகப் புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளோம்”.

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக பிற்பகல் 1 மணி நிலவரம் - வாக்குப்பதிவு சதவீதம்

சென்னை - 37.16%

கடலூர் - 40.07%

காஞ்சிபுரம் - 41.51%

செங்கல்பட்டு - 35.43%

திருவள்ளூர் - 40.48%,

திருவண்ணாமலை - 39.78%

வேலூர் - 41.48%

விழுப்புரம் - 41.68%

கள்ளக்குறிச்சி - 41.17 %

திருப்பத்தூர் - 40.73%

ராணிப்பேட்டை - 39.77%

அரியலூர் - 37.97%

நாகப்பட்டினம் - 36.56%

பெரம்பலூர் - 41.10%

புதுக்கோட்டை - 40.21%

தஞ்சாவூர் - 40.68%

திருச்சிராப்பள்ளி - 41.26%

திருவாரூர் - 41.07%

தருமபுரி - 40.69%

திண்டுக்கல் - 41.37%

கோயம்புத்தூர் - 38.67%

கரூர் - 40.96%

ஈரோடு - 41.08%

கிருஷ்ணகிரி - 38.60%

நாமக்கல் - 40.27%

நீலகிரி - 37.39%

சேலம் - 39.63%

திருப்பூர் - 40.80%

கன்னியாகுமரி - 39.13%

மதுரை - 39.66%

ராமநாதபுரம் - 39.26%

சிவகங்கை - 40.67%

தேனி - 38.99%

தூத்துக்குடி - 39.60%

திருநெல்வேலி - 32.29%

தென்காசி - 39.17%

விருதுநகர் - 41.79%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in