

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, வழக்கம்போல் தனது டூவீலரில் வந்து நல்ல நேரத்துக்காக காத்திருந்து வாக்களித்தார்.
புதுச்சேரி திலாசுப்பேட்டையில் தனது வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோயில் வீதி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வழக்கம்போல் அவரது ராசியான யமஹா டூவீலரில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வந்தார்.
பின்னர் வாக்குச்சாவடியில் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தார். சரியாக 8.10 மணிக்குமேல் தனக்கு நல்ல நேரம் என்பதால் வாக்களிக்க காத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சுமார் 8.15 மணியளவில் தனது வாக்கை ரங்கசாமி செலுத்திவிட்டு புறப்பட்டார்.