Published : 19 Nov 2015 08:25 AM
Last Updated : 19 Nov 2015 08:25 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் 23 குழுக்கள்: முகாம்களில் 26 ஆயிரம் பேர் தஞ்சம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 23 சிறப்பு குழுக்கள் வெள்ள நிவார ணப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வீர்ராகவ ராவ் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பின. கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் மழைநீரும் ஆந்திர தடுப்பணை மற்றும் ஏரி மற்றும் பூண்டி ஏரிகளிலிருந்தும் வெளி யேறிய உபரி நீராலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஏரிகளை ஒட்டியுள்ள பகுதிகள், ஆற்றுக்கரையோர கிரா மங்கள் பல வெள்ள நீரில் மூழ்கி யுள்ளன.

திருநின்றவூர் அருகே புதுசத் திரத்தில் கூவத்தின் குறுக்கே மழைநீரால் பாதிக்கப்பட்ட தரைப் பாலத்தை நேற்று ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு செய்து, பாதிப்பினை சரி செய்ய அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொசஸ்தலை ஆற்றில் பெருக் கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சடையங்குப்பம், மீஞ்சூர் அருகே உள்ள ஈச்சங்குழி, குளக்கரை மற்றும் மணலி புதுநகர் பகுதிகளையும் வீரராகவராவ் படகில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பருவமழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக பெய் துள்ளது. இதனால் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 23 சிறப்பு குழுக்கள் வெள்ள நிவாரணப் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை, 111 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8423 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தவிர மழையினால் பாதிக் கப்பட்டு உணவு தயாரிக்க வாய்ப் பில்லாதவர்கள் உட்பட 26,423 பேருக்கு நாள்தோறும் உணவு, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் சேதம் ஆகியவற்றுக்காக இதுவரை ரூ.83,44,400 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x