Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள்- இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு: பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் வீரர்கள்; தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியா குமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடு கின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஞாயிற் றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறை வடைந்த நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரையும் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

88,937 வாக்குச் சாவடிகள்

தமிழகம் முழுவதும் 88,937 வாக் குச் சாவடிகள் உள்ளன. இதில் 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 10,183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர் களாக 4 லட்சத்து 17,521 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8,014 நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59,165 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தலா 91,180 எண்ணிக்கையில் தயாராக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டுநெறி முறைகளை பின்பற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 2 சுகா தாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் கரோனா தடுப்பு கவச உடைகளை வழங்குவது, அதை திரும்பப் பெற்று முறையாக அழிப்பது, வாக்காளர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்வது, முகக் கவசம் இல்லாதோருக்கு முகக் கவசம் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பதற்ற மான மற்றும் மிகவும் பதற்றமான வாக் குச் சாவடிகளை வெப் காஸ்டிக் முறை யில் கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க வழங்கப்பட்டுள்ள 1950 தொலைபேசியில் வரும் அழைப்புகளை கையாளும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

46,203 வாக்குச் சாவடிகளில் மட்டும் வெப் காஸ்டிங் முறையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனிகளைச் சேர்ந்த 23,200 துணை ராணுவப் படையினர், தமிழகம் மற்றும் பிற மாநில போலீஸார், ஊர்க்காவல் படையினர், சிறை மற்றும் தீயணைப்பு படையினர், முன்னாள் படைவீரர்கள் உள்பட 1 லட்சத்து 58,263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

80 வயதைக் கடந்த முதியோர் உட்பட 1 லட்சத்து 4,282 பேர், மாற்றுத் திறனாளிகள் 28,531 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இது வரை முறையே 1 லட்சத்து 3,202 பேர் மற்றும் 28,159 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். வாக்குச் சாவடி அலுவலர்கள் 4 லட்சத்து 91,027 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. இதுவரை 2 லட்சத்து 592 பேர் வாக்களித்துள்ளனர். இவர்கள் மே 2-ம் தேதி காலை 8 மணி வரை வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 28 பேர் வாக்களித்துள்ளனர்.

தேர்தல் வாக்குப் பதிவு நாளான இன்று அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள், தொழிற்சாலைகள் உள் ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழி லாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங் கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மகளிர் வாக்குச் சாவடிகள் என மொத்தம் 235 வாக்குச் சாவடிகள் பல்வேறு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

விவிபாட் இயந்திரத்தில் வாக்காளர் கள் வாக்களிக்கும் சின்னத்துக்கும், அதில் காட்டும் சின்னத்துக்கும் வேறு பாடு இருந்தால், வாக்குச்சாவடி தலைமை அதிகாரியிடம் புகார் அளிக்க லாம். சின்னம் ஒன்றாக இருந்தால் புகார் தெரிவித்த வாக்காளருக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இவ்விரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

சி-விஜில் செயலி மூலமாக இதுவரை 3 ஆயிரத்து 991 புகார்கள் வந்துள்ளன. கரூர் மாவட்டத்தில் அதிக புகார்கள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் இதுவரை ரூ.428 கோடி மதிப்பு ரொக்கம், பரிசுப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் இரவு 7 மணி வரை வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துவாக்குச் சாவடிகளும் தற் போது தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக் களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க கரோனா நோயாளிகளுக்கு அனுமதி

கரோனா நோயாளிகள் வாக்களிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் அனைவருக்கும் கவச உடை, ரப்பர் கையுறை, முகக் கவசம், திரவ கிருமிநாசினி உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்தமுறை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளை உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்குமேல் இரவு 7மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x