

மதுரையில் வெயில் சுட்டெரிப் பதால் நிழல் தரும் மரங்கள் இல்லாத வாக்குச்சாவடி மையங் களில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்தது.
மதுரை மாவட்டத்தில் வழக்கத் துக்கு மாறாக வெயிலும், வெப்பக் காற்றும் வீசுகிறது.
இன்று காலை தமிழகம் முழு வதும் ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றவுடன் வாக்களிக்க முடியாது. காலை முதல் மாலை வரை அவர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருக்க வேண்டும். ஆனால், வெயில் சுட்டெரிப் பதால் மக்களால் நீண்ட வரி சையில் காத்திருக்க முடியாது.
வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளில் நிழல் தரும் மரங்கள் அதிகமாக இருந்தால் வாக்காளர்கள் வரி சையில் காத்திருந்து வாக் களிப்பதில் எந்தச் சிக்கலும் இல் லை. ஆனால், மரமே இல்லாத பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்கா ளர்கள் சுட்டெரிக்கும் வெயி லில் வரிசையில் நின்று வாக்க ளிப்பது சிரமம். அதுவும் முதி யவர்கள், பெண்கள் வரிசையில் நின்றால் அவர்கள் மயக்கமடைய வாய்ப்புள்ளது.
அதனால், நிழல்தரும் மரங் கள் இல்லாத பள்ளிகளில் வாக்காளர்கள் வரிசையில் நிற் பதற்கு வசதியாகவும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் தென்னங் கீற்றுகளைக் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியில் அமைத்துள்ள பந்தலால் வாக்குச்சாவடி முன் வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் இதமாக இருப்பதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரி வித்தனர்.