

சென்னை ஆறுகளில் அதிக அளவில் மழை வெள்ளம் செல்லும் நிலையில் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, ஓட்டேரி நல்லா கால்வாய்கள் வழியாக கடலில் கலக்கும்.
சென்னையில் உள்ள இந்த ஆறுகள் எப்போதும் சாக்கடை நிரம்பியே காணப்படும். ஆனால் கனமழை மற்றும் உபரி நீர் வரத்தால் இந்த ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எப்போதும் சாக்கடையை பார்த்து பழகிய மக்களுக்கு ஆறுகளில் தண்ணீர் ஓடுவது ஆச்சரியமாக தெரிகிறது.
அடையாறு, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலங்களில் செல்ப வர்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்தி விட்டு, மழை வெள்ளம் ஓடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் இந்த பாலங்களில் எப்போதும் ஒரு கூட்டம் நின்று கொண்டே இருக் கிறது. இந்நிலையில் ஆற்று நீரை வேடிக்கை பார்க்க சென்ற முருகன் என்ற 12-ம் வகுப்பு மாணவன், வெங்கடேசன்(40) என்பவர் மற்றும் நேற்று முன்தினம் 2 இளைஞர்கள் என 4 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த 4 பேரும் காசி தியேட்டர் அருகே இருக்கும் தரைப்பாலத்தில் நின்று அடையாற்றை வேடிக்கை பார்த்தவர்கள். செம்பரம்பாக்கத் தில் இருந்து அதிகளவு உபரி நீர் அடையாறில் திறந்து விடப்படு வதால் ஆற்றில் வெள்ளம் அதிக ரிக்கும் நேரம் யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு அபாயகரமான நிலை இருந்த பின்னரும், பொதுமக்கள் ஆற்று ஓரங்களுக்கு சென்று வேடிக்கை பார்க் கின்றனர். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருப்பதால் உயிர் பலி அதிகரிக்கிறது.
தற்போது மழை பெய்யாவிட் டாலும் ஏரிகளின் உபரி நீரால் சென்னையில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் ஓடுகிறது. 4 பேர் பலியானதை தொடர்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கும் சைதாப்பேட்டை, அடையாறு, கோட் டூர்புரம் பாலங்களில் இருபுறமும் தலா 3 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாலத்தில் வாகனத்தை நிறுத்தவும், வேடிக்கை பார்க்கவும் பொதுமக்க ளுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். போலீஸ் பாது காப்பை மேலும் அதிகப்படுத் தினால் உயிர்பலியை தடுக்க முடி யும் என்றும் பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.