

கரூர் மாவட்டம் குளித்தலையில் முள்காட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் வாக்காளர் தகவல் சீட்டுகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் இன்று (ஏப்.6) நடைபெறும் நிலையில், வாக்காளர் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி பாகம் அமைவிடம், பாகம் எண், வாக்காளர் வரிசை எண் ஆகியவை அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு தேர்தல் ஆணை யத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட் பட்ட குளித்தலை நகராட்சி 14-வது வார்டு பெரியார் நகர் பகுதிக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் கத்தையாக அப்பகுதியில உள்ள முள்காட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுகிடந்தன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வரு வாய் ஆய்வாளர் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்.
பின்னர், குப்பைத் தொட்டியில் கிடந்த வாக்காளர் தகவல் சீட்டுகளை சேகரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் அளிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து குளித்தலை தேர் தல் அலுவலரும் சார் ஆட்சியரு மான ஷே.ஷேக்அப்துல்ரஹ்மா னிடம் கேட்டபோது, “வாக்காளர் தகவல் சீட்டுகள் குப்பைத் தொட்டியில் கிடப்பதாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் தெளிவாக இல்லை. எனினும், இதுகுறித்து விசாரித்து வருகி றோம்” என்றார்.