

நீலகிரி மாவட்டத்தில் குந்தா லோயர் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 103 வாக்காளர்களே உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 308, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் தலா 280 என மொத்தம் 868: வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில், நீலகிரி மாவட்டம் குந்தா லோயர் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 52 ஆண்கள், 51 பெண்கள் என மொத்தம் 103 வாக்காளர்களே உள்ளனர்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரா கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 61 ஆண்கள் மற்றும் 65 பெண்கள் என 126 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பில்லூர்மட்டம் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 83 ஆண்கள் மற்றும் 89 பெண் வாக்காளர்கள் 172 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
அதிகபட்சமாக குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 525 ஆண்கள் மற்றும் 529 பெண்கள் என மொத்தம் 1054 வாக்காளர்கள் உள்ளனர்.