பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர்களை தாராளமாக வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி அறிவுரை

பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர்களை தாராளமாக வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி அறிவுரை
Updated on
1 min read

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர்களை தாராளமாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ள நிவாரண மீட்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மேயர் சைதை துரைசாமி மற்றும் மண்டலந்தோறும் நியமிக்கப்பட் டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர் வேலுமணி, வெள்ளம் பாதித்த பகுதியில் நோய்கள் பரவாமல் இருக்க, பொதுமக்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர்களை தாராளமாக வழங்க வேண்டும். அதற்காக போதிய அளவு பவுடர்களை இருப் பில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிவாரணப் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, நேற்றைய நிலவரப் படி 96 ஆக இருந்த நிவாரண முகாம்களின் எண்ணிக்கை 31 ஆக குறைந்தது. தங்க வைக்கப்பட் டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தி லிருந்து 5 ஆயிரமாக குறைந்தது.

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் 857-லிருந்து 95 ஆக குறைந்துள்ளது. வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளும், பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in