

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி - ஆலங்குளம் சாலையில் காக்கிவாடன்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.
அப்போது மருந்துக் கலவை அறையை திறந்தபோது உராய்வு ஏற்பட்டு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாரனேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.