உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி

உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி
Updated on
1 min read

சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத் தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப் பாளர் சாம் ராஜேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கும், உடற்தகுதி தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் மனிதநேய மையத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற 42 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 306 பேர் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in