Published : 18 Nov 2015 06:54 PM
Last Updated : 18 Nov 2015 06:54 PM

கலை மரபுகளை காக்கும் மூன்றாம் பாலினம்

நம் மண்ணினுடைய கலை, மரபு, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை மூன்றாம் பாலினம் தாங்கி நிற்பதாக திருநங்கைகள் பெருமைப்பட்டுக்கொண்டனர்.

கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கம் சார்பாக நூல் வெளியீடு, இணையதளம் அறிமுகம், திருநங் கையர் கலைவிழா மற்றும் ‘மிஸ் கோவை 2015’, ‘சாதனையாளர் விருது 2015’ ஆகிய திருநங்கை யரின் முப்பெரும் கலைவிழா-2015 காந்திபுரம் ஸ்ரீ சீனிவாசா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தப்பாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், திரைப்பாடல் நடனங்கள், படுகர், குரும்பர் நடனங்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மூன்றாம் பாலின கலைஞர்கள் நடத்தினர்.

திருநங்கை ரதி புனிதவதியார் எழுதிய ‘பாதை- மூன்றாம் பாலினத் தின் பயணம்’ என்ற நூலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் த. முருகன் வெளியிட, சேலம் ஸ்வஸ்தி மாநில திட்ட மேலாளர் எழில்பாரி பெற்றுக் கொண்டார். திருநங்கைகளில் சாதனை படைத்தவர்கள் வரிசை யில் சீதா செல்வம் (சமூக சேவை), பத்மினி (டிவி செய்தி வாசிப்பாளர்), கல்கி (எழுத்தாளர், நடிகை) ஆகியோர் விருது பெற்றுக் கொண்டனர்.

திருநங்கை பிரியா பாபு பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 8 திருநங்கை கள் அமைப்புக்கு ஸ்வஸ்திக் நிறுவனம்தான் நிதியுதவி தருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கான அங்கீகாரத்தையும், அவர்களுக் கான ரேஷன் கார்டு, அரசு வீட்டுமனைகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட வற்றைப் பெற்றுத்தருவதில் தன்னிகரில்லா சேவை புரிந்து வருகி றது. இந்த நிறுவனம். திருநங்கை களை 3-வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு பொதுமக்களோடு இணைந்து பணியாற்றுவதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

திருநங்கைகள் செய்யும் சமூகப் பணிகள், எதிர்கொள்ளும் பிரச் சினைகள், தேவைகள், ஏனை யோர் அவர்களிடம் காட்ட வேண்டிய பரிவு போன்ற பல்வேறு விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் இணையதளத்தையும் இங்கே வெளியிடுகிறோம். 15 வருடங்களுக்கு முன்பு வரை நாங்கள் சொல்லத் தயங்கிய சம்பவங்களை, ஒதுக்கி வைத்த உறவுகளை, சொந்தபந்தங்களை கருணை கொள்ளச் செய்யும் செய்திகள் அடங்கிய தளமாக இதனை பார்க்கிறோம். எத்த னையோ இடர்பாடுகள், துக்கங்கள், தடைகளைத் தாண்டித்தான் மூன்றாம்பாலினம் இன்று வெளியுலகுகில் நடைபோடுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், கோயில் திருவிழாக்களில் பங்கெடுப்பது தேசிய அளவில் நடந்து வருகிறது. இந்த கிராமியக் கலைகள் அழிந்து விடுமோ என்று பலரும் கலங்கி நிற்கும் வேளையில் அந்த கலை களை காத்து நிற்பதே திருநங்கை யர் கலைக்குழுதான் என்று உறுதி யாகச் சொல்ல முடியும் என்றார்.

திருநங்கையின் பெருமிதம்

15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வெளியுலகுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்டபோது திருநங்கையருக்கு இருந்த நெருக்கடியையும், தற்போது உள்ள நிலைமையையும், அதன் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பையும் எப்படி பார்க்கிறீர்கள் என முப்பெரும் விழாவில் விருது பெற்ற திருநங்கை கல்கி சுப்பிரமணியத்திடம் கேட்டோம். அதற்கு அவர் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது. நான் என்னை வெளிப்படுத்திக் கொண்ட காலகட்டத்தில்கூட திருநங்கைகளை சக மனிதராக என்றாவது இந்த சமூகம் பார்த்ததா என்பது கேள்விக்குறியே. 150 வருடங்களாக வெளிப்படுத்தாது இருந்த விஷயங்களை கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் பகிரங்கப்படுத்தியது, தங்கள் அபிலாஷைகளை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறியது போன்ற பல்வேறு நிகழ்வுகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் பாராட்டியது, குடியரசுத்தலைவர் மாளிகை என்னை அரசு விருந்தினராக அழைத்தது, 2010-ம் ஆண்டில் நியூயார்க் சிட்டிக்கு அமெரிக்க அரசு என்னை அரசு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்தியது எல்லாமே திருநங்கைகளின் சமஉரிமை பெறும் உத்வேகத்துக்கு எழுச்சியூட்டிய பயணம் என்பதில் பெருமிதம் உண்டு.

சமீபத்தில் மாநிலங்களவையில் மூன்றாம் பாலினத்தின் இடஒதுக்கீடு குறித்து எம்.பி திருச்சி சிவா தாக்கல் செய்துள்ள மசோதா, அது விவாதப் பொருளாகும் வேகம் எல்லாமே திருநங்கைகளின் வளர்ச்சிக்கான பாதையின் நீட்சிப்போக்கு என்றும் சொல்லலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x