

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் ஆந்திரம் அருகேயுள்ளது ஏனாம். இங் குள்ள ஏனாம் தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்டு வென்று அமைச்சரான மல்லாடி கிருஷ்ண ராவ், இம்முறை என்ஆர் காங்கிரஸூக்கு தாவினார். தற் போது அத்தொகுதியில் என்ஆர்காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். ரங்கசாமிக்கு ஆதரவாக மல்லாடி கிருஷ்ணா ராவ் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இத்தொகுதி யில் சுயேச்சை வேட்பாளராக துர்கா பிரகாஷ் பொம்மடி என்ப வரும் போட்டியிட்டுள்ளார். சிலநாட்களாக துர்கா பிரகாஷை காணவில்லை என்று அவரதுமனைவி ஏனாம் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஏனாம் போலீ ஸாரிடம் விசாரித்தபோது, “பிரச்சாரத்துக்கு சென்ற கணவரை கடந்த 1-ம் தேதி முதல் காணவில்லை என்று புகார் அளித்துள் ளார். இதுபற்றி விசாரணை நடந்துவருகிறது” என்று குறிப்பிட்டனர்.
இதுதொடர்பான விவரங் களை தேர்தல்துறைக்கும் அனுப் பியுள்ளனர்.