செஞ்சியில் ஒரே இடத்தில் 3 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்

செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஒரே நேரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட திமுக, பாமக வேட்பாளர்கள்.
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஒரே நேரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட திமுக, பாமக வேட்பாளர்கள்.
Updated on
1 min read

செஞ்சியில் ஒரே இடத்தில் 3 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச் சாரம் மேற்கொண்டனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 7 மணிக்குபிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று மாலை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இறுதி கட்ட பிரச்சார மாக ஊர்வலம் நடத்தினர்.

அந்த வகையில் செஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜேந்திரன், திமுக வேட்பாளர் மஸ்தான், அமமுக வேட்பாளர் கௌதம் சாகர் ஆகிய 3 வேட் பாளர்களும் நேற்று மாலை 6.15 மணிக்கு செஞ்சி 4 முனை சந்திப்பில் ஒவ்வொருவரும் ஒரு சாலையில் குவிந்தனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் 6.50 மணிக்கு ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றனர்.

எப்படி ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 3 வேட்பாளர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என செஞ்சி டி எஸ் பி இளங் கோவனிடம் கேட்டபோது, "யாருக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை. 4 முனை சந்திப்பு பிரச் சாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி. எனவே தடையை மீறிய வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in