தமிழகம்
சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டுச் சிறை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் வீட்டின் முன் மதுவிலக்கை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் தன் தந்தையுடன் கோடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர்.
