ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கூலித் தொழிலாளர்களிடம் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரச்சாரம் செய்வதற்காக ஆட்டோவில் சென்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரச்சாரம் செய்வதற்காக ஆட்டோவில் சென்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
Updated on
1 min read

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வயல் வெளிகளில் வேலை செய்த கூலித் தொழிலாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குச் சேகரித்தார்.

ராஜபாளையம் சட்டப் பேர வைத் தொகுதியில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இவர் ஆட் டோவில் சென்று மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி யில் வயல் வெளியில் வேலை செய்த கூலித் தொழிலாளிகளிடம் வாக்குச் சேகரித்தார்.

முன்னதாக அவர் ராஜ பாளை யம் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும்போது பேசியதாவது:

ராஜபாளையம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரனாக, மூத்தவர்களுக்குப் பிள்ளையாக தொகுதியில் பணியாற்றுவேன்.

நான் அமைச்சராக இருந்த கடந்த 10 ஆண்டு காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன்.

நான் கொண்டு வந்த திட் டங்களை இங்குள்ள திமுக எம்எல்ஏ அவர் கொண்டு வந்த தாகப் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in