வெள்ள நிவாரண நிதியாக எம்.பி.க்கள் ரூ.1 கோடி ஒதுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தல்

வெள்ள நிவாரண நிதியாக எம்.பி.க்கள் ரூ.1 கோடி ஒதுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தல்
Updated on
1 min read

`தமிழக வெள்ள நிவாரண நிதி யாக தலா ரூ.1 கோடியை அனைத்து எம்.பி.க்களும் ஒதுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹர்கிஷன் சுர்ஜித் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரங்கராஜன் எம்.பி. செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது. இதில் கடலூர், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக் கணக்கான வீடுகள், வேளாண் நிலங்கள் சேதமடைந்துள்ளன.

சென்னையில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய ரூ.2,500 கோடி தேவைப்படும் என்று சென்னை மாநகராட்சி அதி காரிகள் மதிப்பிட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இது பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி மதிப்பீடுக்கு முன்பாக செய்யப்பட்ட சேத மதிப்பீடு ரூ.8,481 கோடி. அதில் ரூ. 2 ஆயிரம் கோடி உடனடியாக தேவை என தமிழக அரசு தெரி வித்துள்ளது. மத்திய அரசு ரூ.939.63 கோடியை மட்டுமே அளித்துள்ளது.

இந்த நிதியை கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய முடியாது.

மத்திய குழு அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து இடதுசாரிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

தலா ரூ.1 கோடி

தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக அனைத்து எம்.பி.க்களும் தங்களது தொகுதி நிதி யில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்க வேண்டும். பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன. இதை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சி களுமே வேடிக்கை பார்த்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.

மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங் கட்ராமன், எஸ்.நூர்முகம்மது, மதுக்கூர் ராமலிங்கம், திருநெல் வேலி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in