எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா: பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடும் சூழலை ஏற்படுத்த கோரிக்கை

எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா: பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடும் சூழலை ஏற்படுத்த கோரிக்கை
Updated on
2 min read

எலியட்ஸ் கடற்கரையில் 4-வது வாரமாக கார்கள் இல்லாத ஞாயிறு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றோர் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகரப் பகுதியில் குழந்தைகள் விளையாடவும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும் பொது இடங்கள் குறைந்துவிட்டன. இந்நிலையில் பொது இடம் ஒன்றை உருவாக்கும் நோக்கில், ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற கருப்பொருளுடன், ‘தி இந்து’ நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் (ஐடிடிபி) சார்பில், சென்னையில் முதன்முறையாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா அக்டோபர் 11-ல் தொடங்கியது.

இவ்விழா 4-வது வாரமாக நேற்றும் நடைபெற்றது. அதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை அச்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பின்னர் 800 மீட்டர் சாலையின் நடுவில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்று யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற்பயிற்சி, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, எறிபந்து, கேரம் போன்ற விளையாட்டுகளை பொதுமக்களுக்கு கற்றுக்கொடுத்த னர். சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி, கோட்டோவியங்களுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி போன்ற வையும் வழங்கப்பட்டன.

விழாவில் வைக்கப்பட்டிருந்த பல்லாங்குழி விளையாட்டை சிறுமி சான்யாவுடன் விளையாடிய புரசைவாக்கத்தை சேர்ந்த வீணா பத்மகுமார் (50) கூறும்போது, “இந்த பல்லாங்குழியை சிறு வயதில் விளையாடியுள்ளேன். இந்த விழாவில் பார்த்ததும் குழந்தை ஒருவருடன் விளையாடி மகிழ்ந்தேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அனை வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கில்லி, கோலி, பாண்டி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதற்கான சூழலையும் இப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

முதியோருக்கு எறிபந்து விளை யாட்டு கற்றுக்கொடுத்த பாலவாக் கத்தை சேர்ந்த மை ஸ்கூல் அமைப்பின் நிர்வாகி பி.ராதிகா கூறும்போது, “இந்த விழாவில் முதியோருக்கு எறிபந்து விளை யாட கற்றுக்கொடுத்தது மகிழ்ச்சி யளிக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த விழா ஏற்பாட்டாளர் களுக்கு எனது நன்றியை தெரிவித் துக்கொள்கிறேன்” என்றார்.

இவ்விழாவில் கடந்த 4 வாரங் களாக பங்கேற்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சக்தி கூறும்போது, “தற்போது மாநகரங்களில் நடக்கும் விழாக் களில் மேற்கத்திய இசை மற்றும் நடனம் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

நாங்கள் சற்று வித்தியாசமாக பாரம்பரிய பறை இசையை பிரபலப்படுத்தி வருகிறோம். இன்று (நவ. 1) நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து, அவரையும், அவருக்கு தெரியாமல் சக நண்பர்களையும் வரவழைத்து, ஆச்சரியமூட்டும் வகையில் பிறந்தநாள் விழாவையும் இங்கு கொண்டாடினோம்” என்றார் அவர்.

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கொசுவால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் பங்கேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in