

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.
அவருக்கு ஆதரவாக பாஜக தலைவரகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் நமச்சிவாயத்துக்கு நேற்று திடீரென உடல் நலம் குன்றியது. பரிசோதனை செய்து பார்த்த போது கரோனா தொற்று உறுதியானது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக் கொண்டார். தன்னை சந்தித்த அனைவரையும் தொற்று பரிசோதனை செய்து கொள்ள கோரிக்கை விடுத்து உள்ளார்.