‘சாரி...! ஐ யாம் ஸ்பீக்கிங் வித் யூ.. கரோனா காலத்துல எங்கே போனீங்க..!- கார்த்தி சிதம்பரத்தை டென்ஷனாக்கிய போதை ஆசாமி

‘சாரி...! ஐ யாம் ஸ்பீக்கிங் வித் யூ.. கரோனா காலத்துல எங்கே போனீங்க..!- கார்த்தி சிதம்பரத்தை டென்ஷனாக்கிய போதை ஆசாமி
Updated on
1 min read

காரைக்குடி அருகே பனம்பட்டியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரச்சாரத்தின்போது போதையில் இருந்த முதியவர் ஒருவர் எம்.பி.யை கேள்வி கேட்டு மடக்கியதால் காங்கிரஸார் உஷ்ணமாகினர்.

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து, பனம்பட்டியில் கார்த்தி சிதம்பரம் எம்பி பிரச்சாரம் செய்தார். அப்போது போதையில் இருந்த முதியவர் ஒருவர், ‘கரோனா காலத்தில் எங்களுக்கு எந்த உதவியும் செய்ய வரல..! இப்ப வாக்கு மட்டும் கேட்டு வந்தீட்டீங்களா?,’ எனக் கோபமாகக் கேட்டார்.

இதற்கு, ‘கரோனா பரவிய காலம் என்பதால் வர முடியவில்லை,’ என கார்த்தி சிதம்பரமும் சிரித்தவாறே சமாளித்தார்.

அதன்பிறகும் விடாத அந்த நபர், ‘சாரி, ஐயாம் ஸ்பீக்கிங் வித் யூ கார்த்தி,’ என ஆங்கிலப் புலமையுடன் பேசினார். தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தைப் பேசவிடாமல் அந்நபர் இடையூறு செய்து கொண்டே இருந்ததால் அவரை காங்கிரஸார் ஓரங்கட்டி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in