Published : 04 Apr 2021 03:15 am

Updated : 04 Apr 2021 06:23 am

 

Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 06:23 AM

தேர்தல் தகராறு வழக்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் மகன் உள்ளிட்டோரை பிடிக்க தீவிரம்

pollachi-jeyaraman-son

கோவை/பொள்ளாச்சி

தேர்தல் தகராறு வழக்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகரின் மகன் உள்ளிட்டோரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில், கடந்த 28-ம் தேதி திமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்தஅதிமுகவினருக்கும், பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அப்பகுதி திமுகபிரமுகர் பார்த்தசாரதி, வடக்கிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார், பொள்ளாச்சி தொகுதி அதிமுகவேட்பாளரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், அவரதுமகன் பிரவீன், கட்சி நிர்வாகிகள்நாமகிரிராஜ், வீராசாமி, சதீஷ்குமார், நாகமாணிக்கம் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக தரப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், திமுக வேட்பாளர் வரதராஜன், மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தென்றல் மணிமாறன், மருதவேல், நவநீதன், பார்த்தசாரதி ஆகிய 6 பேர் மீதும் வடக்கிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படைஅமைத்தனர். போலீஸார் தேடுவதை அறிந்த பிரவீன் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.

மற்றொரு சம்பவம்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான வடவள்ளியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பொறியாளர் சந்திரசேகர் கடந்த மார்ச்27-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக திமுக சார்பில் போலீஸில் புகார் செய்தனர். இதன்பேரில் வடவள்ளி போலீஸார், சந்திரசேகர் மீது வழக்கு பதிந்தனர். சந்திரசேகரை கைது செய்ய வடவள்ளி போலீஸார், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் வாங்கிஇருப்பதாக கூறிய சந்திரசேகர், அதை போலீஸாரிடம் காட்டியுள்ளார். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து திரும்பினர்.



தேர்தல் தகராறுசட்டப்பேரவை துணை சபாநாயகர்துணை சபாநாயகர் மகன்Pollachi jeyaraman son

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x