

தேர்தல் என்றாலே தமிழகமே திருவிழா கோலம் பூண்டுவிடும். அரசியல் கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கிடையே அரிதாரம் பூசிய நடிகர்களும் வலம் வருவதுண்டு.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, மேடை நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் வசனம் எழுதி வந்த அண்ணா, கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் போன்றவர்கள் திரைப்பட பின்னணியோடு கட்சியின் கொள்கைகளை இலைமறை காயாக மக்களிடம் கொண்டு சென்று, அக்கட்சிக்கு வலு சேரத்தனர்.
அன்று தொடங்கிய திரைக் கலாச் சாரம் இன்று வரை அனைத்துக் கட்சி களிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.குறிப்பாக திமுகவில் உறுப்பினராக இல்லாத என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ராதிகா, வடிவேலு, திமுக உறுப்பினர்களான எம்ஜிஆர், எஸ்எஸ் ராஜேந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு, டி.ராஜேந்தர், விஜயகுமாரி, குமரிமுத்து, நெப்போலியன், குஷ்பு, தாணு போன்றவர்கள் திமுகவின் பிரச்சார பீரங்கிகளாக வலம் வந்த வரலாறு உண்டு.
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமார், ஆனந்தராஜ், முரளி, விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம், மனோரமா என ஒரு திரைப்பட்டாளமே களமிறங்கி வாக்கு சேகரித்தது.
காங்கிரஸூம் கட்சியும் சிவாஜி தொடங்கி குஷ்பு, நக்மா வரையிலும் நட்சத்திரங்களை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு, பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டதுண்டு.
தற்போது தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவும் நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சிவாஜி மகன் ராம்குமார், ராதாரவி ஆகியோரைக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறது. குஷ்புவும் அங்கே ஐக்கியமாகியிருக்கிறார்.
இந்தக் கட்சிகள் தவிர தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் திரை நட்சத்திரங்களின் தலைமையின் கீழ் தான் இயங்கி வருகின்றன.
ஆனால், நடப்பு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு நடிகரை கூட பிரச்சாரக் களத்தில் இறக்கவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் மட்டுமே பிரதான பிரச்சாரத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியின் பிற முக்கிய நிர்வா கிகளுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி களமிறக் கப்பட்டிருக்கிறார். சில திரைப்படங்களில் நடித்து, ‘நடிகர்’என்ற அந்தஸ்து உதயநிதிக்கு இருந்த போதிலும், திரை நட்சத்திரம் என்பதைத் தாண்டி ‘ஸ்டாலின் மகன்’ என்றே மக்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
எனவே இந்தத் தேர்தலில் திமுகவில் உதயநிதி தவிர்த்து, மற்ற நடிகர்கள் எவரும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
‘நடப்பு தேர்தல் களம் வித்தியா சமானது. இதில், திரை நட்சத்திரங்களின் பிரச்சாரம் எடுபடாது என்று திமுக கருதுகிறதோ!’ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது.