கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுகிறது

கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுகிறது
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் கடும் வெயிலால் வீட்டுக்குள் பொதுமக்கள் முடங்கிக்கிடக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் சில தினங்களாக 98 டிகிரி வெயில் அடித்த நிலையில் தற் போது 101.48 டிகிரி வெயில் எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் உள்ளனர். கடும் வெயில் காரணமாக இளநீர், நுங்கு, மோர், குளிர்பானங்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிபட்டு வருகின்றனர். காலையிலேயே வெயில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. மதியம் அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைந்துள் ளனர். நடந்து செல்லும் பொதுமக்கள் குடை பிடித் தவாறு செய்கின்றனர், வாகன ஓட்டிகள் தலையில் துண்டு, தொப்பி, கண்கண்ணாடி அணி செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in