

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்குட்பட்ட அம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நிதி. எளிய திமுக தொண்டர்.
திமுக மற்றும் கூட்டணிக்கட்சி கொடிகளை கட்டிக் கொண்டு தனியாளாக ஊர், ஊராகச் சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகிறார். மிதி வண்டியிலேயே தொகுதி முழுவதும் வலம் வருகிறார்.
“எங்களது குடும்பம் திமுக குடும்பம். திமுகவின் மீதுள்ள பற்றால் எனக்கு தமிழ்நிதி என்றப் பெயரை எனது தந்தையார் வைத்தார். நான் விவசாய கூலி வேலைக்குச் செல்வதுண்டு. கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மீதுள்ள பற்றால் தேர்தல் வந்து விட்டால் போதும், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், கொடிகளைக் கட்டிக் கொண்டு இப்படி கிளம்பி விடுவேன்” என்கிறார்.
கட்சிகள் தோறும், ஊர்கள் தோறும் தமிழ்நிதிகள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கட்சிகளின் அச்சாணி. அது அவர்களுக்கும் தெரியும்.