Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்டங்களைவிட வாகன பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த கட்சியினர்

பிரச்சாரத்துக்காக பொதுக்கூட்டங்களை நடத்துவதால் அதிக செலவு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன. எனவே பல கட்சியின ரும் இத்தேர்தலில் வாகனப் பிரச்சாரங் களையே பிரதானமாக மேற்கொண்டு வருகின்றன.

அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்கள், எதிர்ப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றை முன்னிறு த்தும் களமாக பொதுக்கூட்டங்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விஷயம் சென்றடைவதால் கட்சிகள் பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதில் ஆர்வம் காட்டின. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே இதற்கான கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. பணம் கொடுத்து அழைத்து வந்தாலும் வாகன வாடகை, அவர்களுக்கான உணவு இதர செலவுகள் என்று அதிக பணம் செலவழிக்கும் நிலை உள்ளது. மேலும் பல மணிநேரம் நடைபெறும் இக்கூட்டங்களினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

தற்போது இளையவர்களின் மனோ நிலையும் மாறிவிட்டது. பலரும் சமூக வலைத்தளங்களிலே மூழ்கி இருக்கின் றனர். எனவே இந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது பெருமளவு குறைந்து போனது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபைக்கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் மட்டும் தனியார் இடத்தில் நடந்தன. இருப்பினும் பலரும் வாகனங்கள் மூலமே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பா ளர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 தொகுதி கட்சி மற்றும்சுயேட்சை வேட்பாளர்கள், திரைப்பட பிரமுகர்கள் விந்தியா, கார்த்திக், மனோபாலா, ரஞ்சித், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் வாகன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி, அதிக செலவில் சிக்கித் தவிப்பதை விட அந்தந்த பகுதி மக்களை வாகனங்கள் மூலம் நேரிடையாகச் சென்று சந்தித்து பிரச்சாரம் செய்வதையே கட்சிகள் விரும்புகின்றன. போடியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதுவும் வாகன பிரச்சாரமாகவே நடந்தது.

இது குறித்து கட்சிகள் கூறுகையில், மக்களை மொத்தமாக அழைத்து வரும் கலாச்சாரம் மாறிவிட்டது. பிரம்மாண்டமான பந்தல் அமைத்தல், இருக்கை, பிரியாணி, மது, பொதுமக்கள் வரும் வாகனங்களுக்கான வாடகை என்று அதிக செலவு ஏற்படுகிறது. பலமணி நேரம் நடக்கும் இக்கூட்டங்களை பொது மக்களும் விரும்புவதில்லை. தலைவர் களுக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம். எனவே ஒரு கூட்டத்திற்காக பல மணி நேரம் செலவழிப்பதை விட வாகன பிரச்சாரமே சிறந்ததாக இருக்கிறது. இதனால் கட்சித்தலைவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க முடியும். வாக்காளர்களுக்கும் தலைவர்களை, முக்கிய பேச்சாளர்களை அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதிகபட்சம் அரைமணி நேரத்தில் இதுபோன்ற பிரச்சாரங்கள் முடிந்துவிடுவதால் காத்திருப்பும், நெரிசலும் இல்லாத நிலை உள்ளது. எனவே பொதுக்கூட்டங்கள் தேர்தல் நேரத்தில் சரிவராது என்றனர்.

குளிரூட்டப்பட்ட வாகனம், ஆடம்பரமான இருக்கை, குறிப்பிட்ட நேரம் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு மற்ற நேரங்களில் ஓய்வாக இருந்து கொள்வது போன்ற வசதிகள் இருப்பதால் தலைவர்களும் இதற்குப் பழகிவிட்டனர்.

கட்சியினரின் தேவைக்காக தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், தேவாரம், உத்தமபாளையம், தேவதானப்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலம் 53 இடங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கட்சிகள் இதுவரை இப்பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x