

சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதி களிலும் அதிமுக, திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமமுகவினரின் பிரச்சார வியூகம் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அமமுக போட்டி யிடுகிறது. அவர்கள் அதிமுக மட்டு மின்றி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரையும் தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிரச்சார வியூக த்தை அமைத்துள்ளனர்.
காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட் டியிடுகின்றனர்.
தேர்போகி பாண்டி அமமுக சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் நின்று 1.22 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்றவர். மேலும் காரைக்குடி தொகுதியில் ஓராண்டுக்கு முன்பே அதிமுக தேர்தல் பணிகளைத் தொடங்கியது. ஆனால் அதிமுகவுக்கு சீட் கொடுக்காததால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களை அமமுகவினர் தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். அதே போல் 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொகுதியை கூட்டணிக் கட்சி களுக்கே திமுக ஒதுக்கி வருகிறது. இந்த முறையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென திமுக போராடியது. ஆனாலும் காங்கிரஸூக்கே ஒதுக்கப் பட்டது. இதனால் அதிருப்தியில் இருக் கும் திமுகவினரிடம், ‘காங்கிரஸ் தோற்றால் தான் அடுத்தமுறை உங்களுக்கு சீட் கிடைக்கும்,’ என கூறி அமமுகவினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் சிலரும் அமமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
இதனால் இத்தொகுதியில் பாஜக, காங்கிரஸூக்கு அமமுக கடும் போட் டியைக் கொடுத்து வருகிறது.
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மருதுஅழகுராஜ், திமுக சார்பில் கே.ஆர்.பெரியகருப்பன், அமமுக சார்பில் கே.கே.உமாதேவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கே.கே.உமாதேவன் ஏற்கனவே இத்தொகு தியில் அதிமுக சார்பில் நின்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அதிமுகவினர் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தியாளர்களையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.
சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், அமமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுகின்றனர். அன்பரசன் அமைச்சர் ஜி.பாஸ் கரனுக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் அவரது ஆதரவாளர்களையும், இத்தொ குதியை திமுகவுக்கு ஒதுக்காததால் அதிருப்தியில் இருப்பவர் களையும் தனக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் நாகராஜன், திமுக சார்பில் தமிழரசி, அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாரியப்பன் கென்னடி ஏற்கெனவே இத்தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வென்றவர். இவர் திமுகவில் வெளியூர் நபரை நிறுத்தியதால், அதிருப்தியில் இருக்கும் உள்ளூர் நிர்வாகிகளை தனக்குச் சாதகமாக மாற்றி வருகிறார். மேலும் தன்னை தகுதி நீக்கம் செய்த அனுதாபத்தை காட்டி அதிமுகவினரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.
மேலும் 4 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ மூலம் இஸ்லாமியர் வாக்குகளையும் அமமுகவினர் கவர்ந்து வருகின்றனர். தேமுதிகவினரும் அமமுகவினருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகின்றனர். அமமுகவினரின் வியூகம் 4 தொகுதிகளிலும் அதிமுக, திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர் சகர்கள் கூறுகின்றனர்.