

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், ‘என்எல்சி நிறுவனம் வெள்ள நிவாரணமாக ரூ.500 கோடி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுப் பேட்டை, பண்ருட்டி, பாதிரிக்குப் பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றுமுன்தினம் பார் வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பாக மழை நிவாரண உதவிகளை வழங்கி னார். இதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களுக்காக ரூ.243.03 கோடி ஒதுக்கி கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் 27 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப் பதாக ஆட்சியாளர்கள் கூறுகின் றனர். அந்த பணிகள் என்னவாகின?
என்எல்சி மீது வழக்கு
கடலூர் மாவட்டத்தில் பெரியகாட்டுப்பாளையம், விசூர், கல்குணம், பூதம்பாடி, மேலிருப்பு உள்ளிட்ட பல கிராமங்களில் பெரும் உயிரிழப்பும் வாழ்வாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனம் பொறுப்பற்ற தன்மையோடு பெருமளவு தண்ணீரை திறந்து விட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட மக்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்திய என்எல்சி நிறுவனத்தின் மீது பாமக வழக்கு தொடரும். கடலூர் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ.500 கோடியை என்எல்சி நிறுவனம் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நிவாரணமாக ரூ.20 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றார்.