

கோவை தெற்கு தொதியை மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் அவர் பேசும்போது, “கோவையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் தெற்கு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றாமல் ஓயமாட்டேன். மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன். இதுதான் என் இலக்கு” என்று கமல் தெரிவித்தார்.
கமலுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசும்போது, “மக்களைக் கவனிப்பதற்காக நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டாம். ஓட்டுக்குப் பணம் வாங்குகிறீர்கள் என்றால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். உழைத்து உண்ணும் உணவுதான் உடலில் ஓட்டும்” என்று சரத்குமார் தெரிவித்தார்.