Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

எதிர்க்கட்சியினரை மிரட்டவே வருமான வரி சோதனை: பாஜக மீது மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினரை மிரட்ட பாஜகவருமான வரித்துறையை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் குழுவின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ்கூட்டணி வெற்றி பெறும். திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்த தேசத்தை வழிநடத்த வேண்டும் என்று, கடந்த மக்களவைத் தேர்தலின் போது, மு.க.ஸ்டாலின் தான் முதன் முதலில் முன்மொழிந்தார். நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், பாஜக அரசு மாநிலங்களில் நீட்தேர்வை கட்டாயப்படுத்தி திணிக்கிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கு சென்றாலும் பிரச்சினை ஏற்படுகிறது. அவர் செல்லும் இடங்களில் மக்களை மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிளவுபடுத்துகிறார். 25 சதவீத குற்றச் சம்பவங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க முடியாத யோகி ஆதித்யநாத், தமிழகத்துக்கு வந்து பெண்கள் பாதுகாப்பு குறித்தும், திமுக - காங்கிரஸை குற்றம் சாட்டி யும் பேசுகிறார்.

பாஜகவின் தவறான நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தங்களை செயல்படுத்துப வராக உள்ளார். பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவை அனைத்து துறை மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தஆட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறையினர், நகை வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்பாஜகவை நுழைய அனுமதிக்ககூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்அமைப்பினர் பாம்பின் விஷம்போன்றவர்கள். அவர்கள் தென்னிந் தியாவுக்கு எதிரானவர்கள். உடல் பலம், அரசியல் பலம் ஆகியவற்றுடன் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்களை யும் இந்த அரசு பிறரை அச்சுறுத்த பயன்படுத்துகிறது.

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை கூட இந்தியில் வெளியிடுகின்றனர். பாஜக தமிழ் கலாச்சாரத்தை, சுயமாியாதையை அழிக்கப் பார்க்கிறது. அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் அண்ணாவின் கொள்கைகளை கைவிட்டு விட்டு, அமித்ஷாவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர். தேர்தல் நேரத்தில் எதிர் கட்சியினரை மிரட்டவும், அச்சுறுத்தவும், அவர்களின் வலிமையை குறைக்கவும் வருமான வரித்துறை சோதனையை ஒரு யுக்தியாக பாஜக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோவைதெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்கு மார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x