Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் புதுவை 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

காங்கிரஸ்- திமுக கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சியில் புதுச்சேரி 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது என காரைக்கால் மாவட்டத் தில் நேற்று பிரச்சாரம் செய்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டம் நெடுங் காடு (தனி) தொகுதி என்.ஆர்.காங் கிரஸ் வேட்பாளரான எம்எல்ஏசந்திரபிரியங்காவை ஆதரித்து, பூவம், வரிச்சிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில், புதுச்சேரி 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. 5 ஆண்டுகளில் 10 பேருக்குக்கூட வேலைவாய்ப்புகளை வழங்க வில்லை. எத்தனை பேர் வேலைஇழந்துள்ளனர் என்றுதான் கணக் கெடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. முதியோர் உதவித் தொகை உயர்த்தப்படவில்லை. எந்தவொரு பிரிவு மக்களுக் கான நலத்திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.

எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுநர் மீதும் பழிபோட்டுக்கொண்டு, போராட்டங்களை நடத்திக் கொண்டே 5 ஆண்டுகளை கடத்திவிட்டனர். ஆளுங்கட்சி எம்எல்ஏக் களே அரசை எதிர்க்கும் ஆட்சியா கத்தான் இந்த ஆட்சி இருந்தது.

2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, பல் வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தோம். அந்தத் திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலே, அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை. எனவே, புதுச்சேரியில் அனைத்து மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட எங்களின் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என்.ஆர்.காங்கிரஸ்தான். அதனால், நிச்சயமாக முதல்வராக நாம்தான் இருப்போம் என்றார். அப்போது, அதிமுக காரைக்கால் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ்.ஆர்.ராஜசேகர், காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான எம்எல்ஏ பி.ஆர்.என்.திருமுருகன் ஆகியோரை ஆதரித்து, அந்தந்த தொகுதிகளில் ரங்கசாமி வாக்கு சேகரித்தார்.

கூட்டணிக் கட்சிகளின் தொகுதி களில் ரங்கசாமி பிரச்சாரம் மேற் கொள்வதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வரும் நிலை யில், திருநள்ளாறில் பாஜக வேட் பாளருக்காக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x