Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடலூர் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை உடனே நிறைவேற்றுவோம்: வடலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி

கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வருவதால் அதை பொறுக்க முடியாமல் எங்கள் மீதுவருமான வரித்துறையை ஏவி ரெய்டுநடத்துகிறார்கள் என்று திமுக தலை வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் குறிஞ்சிப்பாடி எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கடலூர் ஐயப்பன், புவனகிரி சர வணன், சிதம்பரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான், காட்டுமன்னார்கோவில் விடுதலைச்சிறுத்தைகள் வேட்பா ளர் சிந்தனைச்செல்வன் ஆகி யோரை ஆதரித்து நேற்று கடலூர்மாவட்டம் வடலூரில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘வாடிய பயிரை கண்டபோதேல் லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் பிறந்த மண்ணில் ஓட்டு கேட்டு, கருணாநிதியின் மகனாக வந்துள்ளனேன். குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் பன் னீர்செல்வம் இங்கு இல்லை, அவர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நான் அவரிடம் நாள்தோறும் தொலைபேசியில் பேசி வருகிறேன். அவர் நலமுடன் இருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் திமுக வுக்கு சாதகமாக வருவதால் தாங்கமுடியாமல் என் மகள் வீட்டில் ரெய்டுநடக்கிறது. என்ன தேடினாலும் எதுவும் கிடைக்காது. கருத்துக் கணிப்பில், ‘பாஜகவுக்கு 5 சீட்கள் கிடைக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சீட் கூட வராது. இது பெரியார், அண்ணா பிறந்த மண், திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு செல்லாது. தேர்தலுக்கு நான்கு நாட்கள் உள்ள நிலையில் பயமுறுத்தவும், மனஉளைச்சலை ஏற்படுத்தவே இந்த வருமான வரிச் சோதனைகள் நடக்கின்றன. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார்?

‘மோடி தமிழகத்துக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தினேன்’ என்று கூறுகிறார். மத்திய அரசி டம் தமிழக அரசு கோரிய நிதியைகொடுத்தார்களா? ‘திமுக, காங் கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று மோடி கூறுகிறார்.

அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தது மோடிக்கு தெரியாதா? சமீபத்தில் பெண் எஸ்பி, டிஜிபி மேல் பாலியல் புகார் தந்தது மோடிக்கு தெரியாதா? தருமபுரி பஸ் எரிப்பில் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்தது மோடிக்கு தெரியாதா? பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தான் பாலியல் வழக்குகள் அதிகம் உள்ளது மோடிக்குத் தெரியாதா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது’ என்று தமிழக மக்கள் பிடிவாதமாக உள்ளனர். 200 இடங்களில் நாம் வெற்றி பெறுவது உறுதி. புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்துவிட்டு ‘நான் விவசாயி’ என்று கூறும் பழனிசாமி விஷ வாயு, தவழ்ந்து செல்வது, ஊர்ந்து செல்வது அவருக்கு ஒன்றும் புதிதல்ல இந்த கேடு கேட்ட ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியாக 505 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறை வேற்றுவோம். விவசாயிக்கு தனிபட்ஜெட் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்று வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x