

போடி தொகுதியில் கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
போடி ஒன்றியத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி, டொம்புச் சேரி, துரைராஜபுரம் காலனி, உப்புக்கோட்டை, பொட்டல்களம், குண்டலநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், பாலார்பட்டி, விசுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.
கூழையனூரில் அவர் பேசிய தாவது: ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரரீதியாக வளம் பெறும் வகையில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. திருமண நிதிஉதவி, மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்களும் நிறைவேற்றப்பட் டுள்ளன.
போடி தொகுதியில் கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. இந்த முறை அதிமுக வெற்றிபெற்றதும் குடும்பத்துக்கு மாதம் ரூ.1,500, இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்டவை வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.