

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 11.10 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரம்பலூருக்கு வந்தார்.
அங்கு தனது பிரச்சார வேனின் மேல்புறத்தில் நின்று தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தும், கும்பிட்டும், வெற்றியைக் குறிப்பிடும்வகையில் சைகை செய்தபடியும் சில நிமிடங்கள் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதில் தேமுதிக, அமமுக, எஸ்டிபிஐ மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.