

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீடு உட்பட திமுகவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனை அரசியல்ரீதியாக அச்சத்தை ஏற்படுத்த நடத்தப்படு வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருந் துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருத் துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவை ஆதரித்து டி.ராஜா பேசியது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வ தற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஆதித் யநாத் ஆகியோர் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். ஏனெனில் தமிழக மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு இந்திய அளவில் பிரதிபலிக்கும் என்பதால், அவர்கள் அச்சத்துடன் எப்படியாவது தங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டுமென தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
ஒருபுறம் தமிழக மக்கள் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வ தற்காக மகிழ்ச்சியோடு இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர் சலிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீடு மற்றும் திமுகவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனை தேவை இல்லாத ஒன்று. மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் அமைப் புகளை தன்னுடைய அரசியல் நோக்கத்துக்கு ஏவிவிட்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. தற்போது நடைபெறும் வருமானவரி சோதனை கூட, அரசியல் ரீதியாக அச்சமூட்டவே நடத்தப்படுகிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாக தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். ஆனால், எதையும் செய்யவில்லை. மாறாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை யையும் குறைத்து கூலியையும் வழங்காத நிலையை உருவாக்கி உள்ளார். நாடு முழுவதும் வேலை யில்லா திண்டாட்டம் அதிகரித் துள்ளது. உலகிலேயே வறுமை யின் காரணமாக பட்டினியால் வாடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இந்தியாவில்தான் உள்ளது. அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திவரும் பிரதமர் மோடி, இந்த ஆட்சி எல்லோருக்குமானது எனக் கூறி வருகிறார். ஆனால் அம்பானி, அதானி போன்றவர்கள்தான் பலனடைகிறார்கள். தவிர, ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். விவசாயிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத் தின் அனைத்து நலன்களையும் புறக்கணித்து வருகின்றனர்.இதற்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவை ஆதரிக்கின்ற அதிமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்றார்.