ஹெச்.ராஜாவுக்கு ஒத்துழைக்காத அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

ஹெச்.ராஜாவுக்கு ஒத்துழைக்காத அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
Updated on
1 min read

காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் துரைமாணிக்கம் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ஹெச்.ராஜா, மாங்குடி, தேர்போகிபாண்டி ஆகியோரிடையே போட்டி கடுமையாகி உள்ளது. அதிமுக, திமுக போட்டியிடாததால் அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியினர் வாக்குகளை இழுக்க தேர்போகிபாண்டி முயற்சி செய்து வருகிறார்.

தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்த திமுகவினரை, அதன் தலைமை எச்சரித்தது. கட்சிப் பதவிகள் பறிபோகும் என்பதால் அக்கட்சி நிர்வாகிகள் மாங்குடிக்காக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதேபோல் ஹெச்.ராஜாவுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்தனர். இதுகுறித்து அதிமுக தலைமைக்குப் புகார் சென்றது. இதையடுத்து அவர்களை தலைமை எச்சரித்துள்ளது. இந்நிலையில் அவர்களும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். மேலும் பாஜகவினரும் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களை கண்டறிந்து வாக்குகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in