வீராணம் ஏரியின் மேற்கு கரை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது

வீராணம் ஏரியின் மேற்கு கரை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரிக்கு மேல்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சித்தமல்லி, வானமாதேவி, அகரபுத்தூர், அறந்தாங்கி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வீராணம் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் நெல், கரும்பு, பாகற்காய், பூச்செடிகள், கத்தரி, சவுக்கை, தேக்கு உள்ளிட்டவைகள் பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழைநீர் சின்னசெங்கால் ஓடை, பெரிய செங்கால் ஓடை வழியே வீராணம் ஏரியில் கலக்கிறது.

செங்கால் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் உள்ளதால் ஓடை வழியே சென்று நேரடியாக வீராணம் ஏரியில் கலக்காமல் விவசாய விளை நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வீராணம் திட்டம் தொடங்கியபோது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் பல்வேறு இடங்களில் மதகுகள் அமைக்கப்பட்டது. தேவையில்லாத இடங்களில் அதிக மதகுகளும் தேவைப்படும் இடங்களில் குறைந்த மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் குறைந்த அளவுள்ள மதகுவழியே செல்லும் நிலை உள்ளதால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையால் சித்தமல்லியில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்ல மதகுகள் போதாததால் அதிகளவிலான தண்ணீர் விளை நிலங்களில் சூழ்ந்து ஏரியில் கலக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in