கோவை சுகுணாபுரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரது மகள் சாரங்கி.
கோவை சுகுணாபுரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரது மகள் சாரங்கி.

‘உங்களில் ஒருவராக எப்போதும் இருப்பார்’: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகள் பிரச்சாரம்

Published on

‘உங்களில் ஒருவராக எப்போதும் இருப்பார்’ என தேர்தல் பிரச்சாரத் தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் மகள் தெரிவித்தார்.

கோவை சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியுடன் அவரது மகள் சாரங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களி டையே பேசியதாவது:

தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முடிந்தவரை அப்பா நிறைவேற்றியுள்ளார். வரும் நாட்களிலும் நிறைவேற்றித் தருவார். அதிமுக அரசு மக்கள் நலனுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கியுள்ளனர். நிறைய இடங்களில் அம்மா மினி கிளினிக்கொண்டுவந்துள்ளனர். குளங்களை தூர்வாரியுள்ளனர். தற்போது அனைத்து குளங்களிலும் நீர் உள்ளது. கரோனா காலத்திலும் அரசு சிறப்பாக செயல்பட்டது. கரோனா காலத்தில் உங்கள் அனைவரையும் குடும்பத்தில் ஒருவராகநினைத்து முடிந்த அளவு உணவுப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை அளித்தார். கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரி களை அதிகப்படுத்தியுள்ளார். அரசு அலுவலகங்கள் மேம்படுத் தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் திட்டங்களைநிறைவேற்றுவோம் என்பார்கள். ஆனால், வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறை வேற்றுவது அதிமுக அரசுதான்.

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 ஆண்டுகளில் நிறை வேற்றிக்கொடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ளாட்சித் துறையில் அதிக விருதுகளை வாங்கியுள்ளார். இவையெல்லாம் மக்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாகியுள்ளன. உங்களில் ஒருவராக அவர் எப்போதும் இருப்பார். அனைத்து தேர்தல் களிலும் அவரை நீங்கள் வெற்றிபெற வைத்துள்ளீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in