சென்னை முதல் கன்னியாகுமரி வரை மதுவிலக்கு நடைபயணம்: குமரி அனந்தன் அழைப்பு

சென்னை முதல் கன்னியாகுமரி வரை மதுவிலக்கு நடைபயணம்: குமரி அனந்தன் அழைப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை முதல் கன்னியாகுமரி வரை 750 கி.மீ. குமரி அனந்தன் நடைபயணம் மேற்கொள்கிறார். வரும் டிசம்பர் 10-ம் தேதி காலை 10 மணிக்கு பாரி முனை ராஜாஜி சிலையில் இருந்து தொடங்கும் நடை பயணம் ஜனவரி 30-ம் தேதி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் உள்ள காந்தி மண்டபத்தில் நிறைவு பெற உள்ளது.

இதுகுறித்து குமரி அனந்தன் வெளியிட்டுள்ளஅறிக்கை:

மதுவால் கோடிக்கணக்கான குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கட்சி சாராத அமைப்பாக அகில இந்திய மதுவிலக்கு பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த பேரவையின் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலி யுறுத்தி சென்னை முதல் கன்னியா குமரி வரை நடைபயணம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த நடைபயணத்தின் தலைவராக கதர் நெசவாளியின் மகனான என்னை தேர்வு செய்துள்ளனர்.

இந்த நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்க இருக்கிறேன். ‘நமது இலக்கு மதுவிலக்கு’ என்ற சொற்கள் பொறித்த காந்தி படம் பொறித்த கொடியினை எடுத்துக் கொடுக்குமாறு அரசியல் தலை வர்களை கேட்டுக் கொள்ள இருக்கிறேன்.

1917-ல் ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவராக இருந்தபோது எங்கள் நகராட்சி எல்லைக்குள் மது விற்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற் றினார். அதுபோல தமிழக உள் ளாட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்ற இந்த நடை பயணத் தின்போது வலியுறுத்துவோம்.

நடை பயணத்தில் என்னுடன் பங்கேற்க நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நபர்கள் குமரி அனந் தன், லாயிட்ஸ் குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 600014 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ, 93821 55772 என்ற தொலைபேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in