

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. அது ஒருபோதும் செல்லாது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அது எப்போதும் செல்லும், என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பா ளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டத்தில் அதிமுக வேட் பாளர்கள் ஐயப்பன் (உசிலம்பட்டி), ஆர்.பி. உதயகுமார் (திருமங்கலம்), மாணிக்கம் (சோழவந்தான்), கோபாலகிருஷ்ணன் (மதுரை கிழக்கு), ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்) ஆகியோரை ஆதரித்துப் பேசியதாவது:
அதிமுக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நல்ல பல திட்டங்களைத் தந்துள்ளது. அதனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நமது எதிர்காலச் சந்ததியினரும் இத்திட்டங்களால் பலனடைவார்கள். 2006-ல் திமுக தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சியைப் பிடித்தார்கள்.
ஆனால், தற்போது வரை தரவில்லை. இதை சட்டப் பேரவையில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த நாங்கள் கருணாநி தியிடம் கேட்டோம். அவர் பொசுக் கென்று கோபப்பட்டு எழுந்து சென்றார்.
இப்போதும் ஒரு பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டி ருக்கிறார்கள். திமுகவின் இத்தேர் தல் அறிக்கை கள்ள நோட்டு. அது ஒருபோதும் செல்லாது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அது எப்போதும் செல்லும்.
பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏராளமா னவற்றை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காகச் சொன்னதையும் முழுமையாகச் செய்கிறோம். தற்போது சொல்லாததையும் செய்கிறோம்.
பெரியார் கண்ட கனவான ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை ஜெயலலிதா நிறைவேற்றினார். தற்போது அதை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஆனால், திமுக பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் காகவும் அதிமுக அரசு பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. மக்க ளுக்கு எது தேவை, எந்தத் திட்டம் தந்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அதைத் தருகிற அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. ஏழை மாண வர்களுக்கு 14 வகை கல்வி உப கரணங்களை வழங்கி அவர் களைப் பட்டம் பெற வைத்துள் ளோம்.
மூன்றில் ஒரு பங்கு நிதியைக் கல்விக்கு ஒதுக்கிய ஒரே அரசு அதிமுகதான். அதனால், தற்போது நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்விக்குச் செல்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 49 சதவீத மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்கிறார்கள். விவசாயிகளுக்கு மானியம் வழங்கி நாட்டிலேயே நெல் உற்பத்தியில் தமிழகம் முத லிடம் வகிக்கிறது என்று பேசினார்.