செல்போன் தராதவர்கள் வாஷிங்மிஷின் தருவார்களா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கேள்வி

செல்போன் தராதவர்கள் வாஷிங்மிஷின் தருவார்களா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கேள்வி
Updated on
1 min read

``செல்போன் தருவதாக மக்க ளவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து, அதை வழங்காத அதிமுக வினர், இப்போது வாஷிங் மிஷின் தருவதாக ஏமாற்றுகிறார்கள்” என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கருக்கு வாக்குசேகரித்து நேற்று அவர் பேசியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவருக்கும் செல்போன் கொடுப்போம் என்று அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், யாருக்கும் செல்போன் வழங்க வில்லை. இப்போது வாஷிங் மிஷின் கொடுப்போம் என்று ஏமாற்றுகிறார்கள். அதே போல், 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்றார்கள். யாருக்காவது வீடு கட்டிக் கொடுத்தார்களா?.

சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே போகிறது. விலையை 200 ரூபாய் குறைக்க முடியவில்லை. ஆனால், ஆண்டு க்கு 6 சிலிண்டர் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். டெல்லியில் நான்கரை மாதங் களுக்கு மேல் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்காதவர் பிரதமர் மோடி.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்துக்கு அதிமுக ஆட்சியில் நீதி கிடைக்காது. திமுக ஆட்சியால்தான் அதிமுகவுக்கே நியாயம் கிடைக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அதிமுக பாஜக எதிர்ப்பு அலை உருவாகி யிருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் மூலம் அதிமுகவினர் தங்களுக்கே குழி வெட்டிக்கொண்டனர்.

அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பணவிநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் நிற்கிறது. பண விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in