

அணைக்கட்டு தொகுதியில் திமுகவின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்களுடன் வாக் காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டது.
வேலூர் மாவட்டத்தில் வாக் காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு வினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தெள்ளூரில் சிலர் வீடு, வீடாகச் சென்று பணம் விநி யோகம் செய்வதாக பறக்கும் படை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத் தது. அதன்பேரில், பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார் தலை மையிலான குழுவினர் விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து திமுக தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் மற்றும் குடும்பம் வாரியாக வாக்காளர் பட்டியலில் வரிசை எண்படி உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திபன் (51), தெள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (57) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அரியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் வாகன தணிக்கையை கடுமையாக்க உத்தரவிட்டார். மேலும், அணைக்கட்டு தொகுதி யில் உள்ள ஒடுக்கத்தூர், பாகாயம், அகரம் கூட்டுச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பறக்கும் படையினருடன் சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டதுடன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை அதிகரிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.