

அதிமுக சார்பில் நலிந்த தொழிலாளர்கள் 15 பேருக்கு தலா ரூ.1லட்சம் வீதம் ரூ.15 லட்சம் குடும்ப நல நிதி இன்று வழங்கப்பட்டது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்கள், புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவிலிருந்தும், போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 104 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 4 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்படும் என பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்படி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தோப்பு என்.டி.வெங்கடாசலம், எம்.எஸ்.எம்.ஆனந்தன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர், 15 பேருக்கு தலார ரூ.1லட்சம் என, ரூ.15 லட்சத்தை இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.