மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்: சீமான் பேச்சு

மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்: சீமான் பேச்சு
Updated on
1 min read

“எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை, விருகம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசும்போது, “எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம். அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புதான் எங்கள் கனவு. நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் நாங்கள் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் எங்கள் கொள்கை அதுவல்ல.

கோடிகளைக் கொட்டுபவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் கோடிகளைக் கொட்டுகிறார்கள். நாங்கள் ஆகச் சிறந்த கொள்கைகளைக் கொட்டுகிறோம். நல்ல கருத்துகளை மக்களிடம் விதைத்துவிட்டால் தவறான அரசு உருவாகாது. உருவானாலும் அது நிலைக்காது” என்று தெரிவித்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in