

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி, பல்லடம் சட்டபேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் போட்டியிடும் எடப்பாடியில் நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். அவர், அங்கு தோற்பது உறுதி. அனைத்து வகையான கருத்துக் கணிப்புகளும் திமுக ஆட்சி அமைப்பதை உறுதி செய்கின்றன. மக்களவைத் தேர்தலில் கொடுத்த மகத்தான வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் கிடைக்கச்செய்ய வேண்டும். நடைபெற உள்ள தேர்தல் நரேந்திரமோடியா? கருணாநிதியா? என்பதை உணர்த்தும் தேர்தல் ஆகும். திமுக மற்றும் கூட்டணி கட்சிக் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து தாராபுரத்தில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்.