போடியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை: ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி

போடி முந்தல் சோதனைச்சாவடி அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வாக்குச் சேகரித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
போடி முந்தல் சோதனைச்சாவடி அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வாக்குச் சேகரித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

போடியில் மாம்பழக்கூழ் தொழிற் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக் குறுதி அளித்தார்.

துணை முதல்வரும், போடி தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், போடிமெட்டு, கொட்டகுடி, குரங்கணி உள்ளிட்ட மலை கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

முந்தல் சோதனைச்சாவடி அருகே அவர் பேசியதாவது: மலை கிராம மக்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை வனப்பகுதியில் சாலை அமைக்க நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் மழை காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரைச் சேமிக்க அப்பகுதியில் சிறு அணை கட்டப்படும்.

போடியில் மா விளைச்சல் அதிகம் உள்ளது. இதற்காக மாம்பழக்கூழ் தொழிற்சாலையும், உரிய விலை கிடைக்கும் வரை வைத்துப் பாதுகாக்க குளிர்பதனக் கிட்டங்கியும் அமைக்கப்படும். மலையடிவார கிராம மக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட வசதி கள் செய்து தரப்பட்டுள்ளன. மலைகிராமங்களைத் தொடர்ந்து மேம்படுத்த அதிமுகவுக்கு வாக்க ளியுங்கள். இவ்வாறு அவர் பேசி னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in