கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சபரிமலை சீசன்: திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளத்துக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்- முன்பதிவு நாளை தொடக்கம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சபரிமலை சீசன்: திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளத்துக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்- முன்பதிவு நாளை தொடக்கம்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சபரி மலை சீசனை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்த புரம், கொல்லம், எர்ணாகுளத் துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06122) மறுநாள் (வியாழன்) காலை 11.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதே சிறப்பு ரயில் (06123) டிசம்பர் 3, 10, 17, 31, ஜனவரி 7 ஆகிய தேதிகளில் (வியாழன்) சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.15-க்கு புறப்பட்டு மறுநாள் (வெள்ளி) காலை 7.45-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

டிசம்பர் 2, 7, 9, 14, 16, 21, 28, 30, ஜனவரி 4, 6, 11 ஆகிய தேதிகளில் (திங்கள்/புதன்) சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06124) மறுநாள் (செவ்வாய்/ வியாழன்) காலை 11.30-க்கு கொல்லம் சென்றடையும். இதே சிறப்பு ரயில் (06125) டிசம்பர் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29, 31, ஜனவரி 5, 7, 12, 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்/ வியாழன்) கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (புதன்/ வெள்ளி) காலை 9.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

டிசம்பர் 4, 11, 18, ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளில் (வெள்ளி) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06109) மறுநாள் (சனி) காலை 5 மணிக்கு எர்ணாகுளம் சென் றடையும். டிசம்பர் 13, 20, ஜனவரி 10-ம் தேதிகளில் (ஞாயிறு) எர்ணா குளத்தில் இருந்து இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06110) மறுநாள் (திங்கள்) காலை 9.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 8-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in